இந்தியாவில் கரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பிழைக்க வந்த ஊரில் கடன் கொடுக்கக்கூட ஆளில்லாமல், உணவின்றி தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக, அம்மாநில அரசு நோடல் அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்தது. அதன்படி, பெங்களூரிலிருந்து ஒரு ரயில்ம, கோவா, மகாராஷ்டிராவிலிருந்து இரண்டு ரயில்கள் என மூன்று ரயில்களை ஏற்பாடு செய்தது.
மகாராஷ்டிராவிலிருந்து புறப்பட்ட இரண்டு ரயில்களில் ஒன்று மும்பையிலிருந்தும், மற்றொன்று நாக்பூரிலிருந்தும் புறப்பட்டன. இந்த மீட்பு பணி குறித்து அலுவலர்கள் கூறும்போது, மே 13ஆம் தேதி கோவா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலிருந்து 5 ரயில்களில் 3 ஆயிரத்து 491 பேர் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்றனர்.