இமாச்சலப் பிரதேச மாநிலம் குல்லு என்ற இடத்தில் இருந்து கதுகுஷானி பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 43 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 35 பயணிகள் காயமடைந்தனர்.
பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 43 பேர் பலி - 43 dead, 35 injured
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 43 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்பு பணி
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.