தமிழ்நாடு

tamil nadu

உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த தமிழர்!

By

Published : Sep 18, 2019, 11:29 PM IST

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்

உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதனை ஏற்று மத்திய அரசு இந்த நான்கு நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளது. அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ரவீந்திர பட், ஹிரிஷிகேஷ் ராய், வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நான்குபேரில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். 23ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய ராமசுப்பிரமணியன், கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் உயர்நீதிமன்றம், தெலங்கனா உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாக பதவி விகித்த அவர் கடைசியாக இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details