இது தொடர்பாக மகாராஷ்டிரா சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, "மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 5024 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 175 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5000 பேருக்கு கரோனா!
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 5024 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கரோனாவால் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,106ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2362 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 79,815 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் 52.25 விழுக்காடாக உள்ளது.
இதுவரை மாநிலத்தில் 8,71,875 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,52,765 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது 5,58,488 பேர் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் 36,903 பேர் நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.