தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாசால் வாழ்வதற்கு கடினமான நாடாக மாறுகிறதா இந்தியா? - டெல்லி மாசு

காற்றின் மாசுவை குறைக்க பல நாடுகள் மேற்கொண்ட திட்டங்களை இந்திய செயல்படுத்தினால் மட்டுமே வாழ்வதற்கு பாதுகாப்பான இடமாக இந்தியா மாறும்.

Air pollution

By

Published : Nov 17, 2019, 2:47 AM IST

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வரம்பை விட ஆறு முதல் ஏழு மடங்கு அதிகளவிலான மாசை இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் சுவாசித்துவருகின்றனர். இந்த மாசுபாடுகள் இரண்டு மூலங்களிலிருந்து வெளிவருகின்றன - வீட்டில் உள்ள திட எரிபொருட்களை பயன்படுத்துவதால் வெளிவரும் மாசு, மற்றொன்று கட்டுமான தளங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் தூசி, புகைக்கரி ஆகும்.

வாகனங்கள், நிலக்கரி மின்உற்பத்தி நிலையங்கள், விவசாய கழிவுகள் போன்றவற்றாலும் மாசு உருவாகின்றன. மாசின் அளவு அல்லது விட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட துகள் PM 2.5, PM10 என வகைப்படுத்தப்படுகிறது. 2.5 மைக்ரான்களுக்கு குறைவான துகள் PM 2.5 என்றும் 10 மைக்ரான்களுக்கு குறைவான துகள் PM 10 எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

மிக ஆபத்தான துகளான PM2.5 வெளியிடுவதில் உலகளவில் இந்திய மூன்றாவது இடத்தில் உள்ளது. 2018ஆம் ஆண்டில் மட்டும் 72.5 μg / m³ (ஒரு கன மீட்டர் காற்றில் மைக்ரோகிராம்) அளவிலான துகளை இந்தியா வெளியிட்டுள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது 10μg/m³ அளவே ஆகும்.

PM 2.5 துகள்கள் வெளியிடுவதில் வங்கதேசம் (97.1μg/m³) முதல் இடத்திலும், 74.3μg / m³ அளவு துகளை வெளியிட்டு பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

காற்று மாசால் பாதிக்கப்பட்ட டெல்லி

காற்றின் தர அட்டவணைப்படி, 55.5-150.4μg / m³ வரையிலான துகள் வெளியிட்டால் அது “ஆரோக்கியமற்ற" மண்டலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தளவிலான துகள்கள் வெளியிடுவதால் இதயம், நுரையீரல்கள் ஆகிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிறது. இந்தியாவின் பல பகுதிகள் 72 μg/m முதல் 135 μg / m அளவிலான PM2.5 துகள்களை வெளியிட்டுவருகிறது.

தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுவை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் இல்லாததும் மாசுவை கட்டுபடுத்துவதற்கான முறையான திட்டங்கள் இல்லாததே நாட்டின் மாசு அதிகரிப்பதற்கு காரணமாகும். இந்தியாவில் காற்றின் மாசு அபாய நிலையைத் தாண்டியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

காற்று மாசால் பாதிக்கப்பட்ட 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 25 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், குருகிராம், காசியாபாத் ஆகிய நகரங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. சராசரியை விட 20 மடங்கு அதிகளவிலான மாசை இந்த இருநகரங்கள் வெளியிட்டுள்ளது.

காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி 11ஆவது இடத்தை பிடித்தது. சராசரியாக 113.5μg / m³ அளவிலான துகளை டெல்லி வெளியிட்டுள்ளது. ஆரோக்கியமற்ற நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு இந்த நகரங்கள் சென்றுள்ளன. காற்றின் மாசு அதிகரித்ததால், உயிரை பறிக்கும் பல ஆபத்தான நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது.

மாசு

ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (ஹெச்இஐ), சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (ஐஎச்எம்இ) ஆகியவை இணைந்து “ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர்” என்ற மாசு குறித்த சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இறப்பு மற்றும் குறைபாடு ஆகியவற்றின் முக்கிய காரணியாக காற்று மாசுபாடு உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் 2017ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு, மது அருந்துதல், மலேரியா, சாலையில் ஏற்படும் விபத்து ஆகியவற்றால் நிகழும் உயிரிழப்புகளை விட காற்று மாசால் நிகழ்ந்த உயிரிழப்புகளே அதிகம். உலகளவில் 2017ஆம் ஆண்டு காற்று மாசுபாட்டால் 147 மில்லியன் உயிரிழப்புகள் நடந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருதய நோயால் பாதிக்கப்பட்டு வயது வந்தோர் 24 விழுக்காட்டினர் உயிரிழந்ததற்கு காற்றுமாசே காரணம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கவாதத்தால் 25 விழுக்காட்டினர், நுரையீரல் புற்றுநோயால் 29 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர்.

காற்று மாசு குறித்த விழிப்புணர்வு

ஊட்டச்சத்து குறைபாட்டிற்குப் பிறகு இந்தியாவில் நிகழும் உயிரிழப்புக்கு முக்கிய காரணியாக காற்று மாசு உள்ளது. 2017 ஆம் ஆண்டில், சுற்றுப்புற துகள்கள் மற்றும் வீட்டிலிருந்து வெளியாகும் மாசுபாட்டால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் நடந்துள்ளன. அதிகளவிலான துகள்கள் வெளியாவதால் நாட்டின் மக்கள்தொகை பாதிப்புக்குள்ளாகிறது.

12 விழுக்காடு உயிரிழப்பு துகள்களின் மாசுபாட்டாலும், அதில் 7% உயிரிழப்பு சுற்றுப்புற துகள்கள் மற்றும் திட எரிபொருட்களிலிருந்து வெளியாகும் மாசால் நிகழ்கிறது. 5 % உயிரிழுப்பு வீட்டிலிருந்து வெளியாகும் மாசால் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. தற்செயலாக, இந்த விகிதம் கடந்த இருபதாண்டுகளாக ஒரே நிலையில் உள்ளது.

47விழுக்காட்டினருக்கு சுவாச நோய் ஏற்படுவகற்கு PM2.5 வகை துகள்களே காரணம். அவற்றில் சுற்றுப்புற துகள்கள் மற்றும் திட எரிபொருட்களிலிருந்து வெளியாகும் மாசால் 26 விழுக்காட்டினருக்கும், வீட்டு மாசுபாடுகள் காரணமாக 21 விழுக்காட்டினருக்கும் நோய் பாதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஒரு சிறிய அளவிலான மாற்றம் கூட நிகழவில்லை. எதிர்பாராதவிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக டெல்லி விளங்குகிறது. வாகனங்களில் சி.என்.ஜி பொருத்தப்பட்டபோதிலும், மாசின் அளவு மோசமாகவே உள்ளது. டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உமிழ்வு இல்லாத பிஎஸ் IV வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் மாசின் அளவு குறைந்தபாடில்லை.

காற்று மாசு குறித்த விழிப்புணர்வு

காற்றின் மாசை தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே ஒரு அளவு மாசு குறையும். விதிமுறைக்கு இணங்காத தொழிற்சாலைக்கு தண்டனை நடவடிக்கைகளை அமல்படுத்துதல், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் சமீபத்திய ஃப்ளூ வாயு சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை நிறுவுதல், பழைய வாகனங்களை வெளியேற்றுதல் ஆகியவை காற்றின் மாசை கணிசமான அளவில் குறைத்திடும். காற்று மாசை குறைப்பதற்கு பல நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டால் மட்டுமே காற்றின் மாசு குறையும்.

இதையும் படிங்க: தொண்டு நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து 4 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details