இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் கரோனாவின் கோரத்தாண்டவத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் இதுவரை 4,128 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக குஜராத்தில் 1,505 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ”மற்ற மாநிலங்களைவிட குஜராத்தில்தான் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது.தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிக உயிரிழப்பு சம்பவங்கள் குஜராத் மாநிலத்தில் நிகழ்கின்றன” என பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த விவரங்களைப் பகிர்ந்து ’குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
- ”குஜராத் - 6.25%
- மகாராஷ்டிரா - 3.73%
- ராஜஸ்தான் - 2.32%
- பஞ்சாப் - 2.17%
- புதுச்சேரி - 1.98%
- ஜார்க்கண்ட் - 0.5%
- சத்தீஸ்கர் - 0.35%" எனக் குறிப்பிட்டுள்ளார்.