பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை, ராகுல் காந்தி பல்வேறு விவகாரங்களிலும் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். தனது விமர்சனங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், சமீப நாள்களாக வீடியோ தொகுப்புகளையும் அவர் வெளியிட்டுவருகிறார். இந்நிலையில், இன்று(ஜூலை.27) ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், சீனா ஆக்கிரமிப்பு குறித்து உண்மைகளை மறைப்பதுதான் தேச துரோகம் என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்க அனுமதிப்பதும் அந்த உண்மையை மறைப்பதும் தேச துரோகம். இதை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதுதான் உண்மையான தேசப்பற்று" என்று பதிவிட்டு, அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
அந்த வீடியோ பதிவில் ராகுல் காந்தி, "இந்தியனாக எனது முதல் முன்னுரிமை எனது நாடும், நாட்டு மக்களும்தான். நமது நிலப்பரப்பில் சீனா நுழைந்துள்ளது, தற்போது நமக்கு தெளிவாகத் தெரிகிறது. இது என்னை பாதிப்படையச் செய்கிறது. அந்நியர்கள் எவ்வாறு நம் நாட்டில் ஊடுருவ முடியும்?