டெல்லி:கடந்த 1921ஆம் ஆண்டு, பிப்ரவரி 12ஆம் தேதி, கன்னாட் பிரபு அடிக்கல் நாட்டிய நாடாளுமன்றக் கட்டடம், காலனி ஆதிக்கத்தின் சின்னமாக உள்ளதாகவும் எனவே அதற்கு மாற்றாக இந்திய கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, தரைத்தளம், தரை கீழ் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என நான்கு தளங்கள் அடங்கிய புதிய நாடாளுமன்ற கட்டடம் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தினை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.