தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தூக்கிலிடப்படும் குற்றவாளிகளுக்கு உடற்கூறாய்வு செய்யப்படுவது ஏன்?

நிர்பயா குற்றவாளிகளின் உடற்கூறாய்வு அறிக்கை மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் மரணம் நிகழ்ந்தது என்று கூறியது. குற்றவாளிகளைத் தூக்கிலிட்ட பின்னர் மரணம் கழுத்து முதுகெலும்பு முறிந்ததன் விளைவாக நபர் இறந்தாரா அல்லது கழுத்து நெரிக்கப்பட்டதன் மூலம் இறந்தாரா என்பதைக் கண்டறிய உடற்கூறாய்வு செய்வதைக் கட்டாயமாக்குவதன் மூலம் அறிய முடியும்.

Here's why postmortem of executed prisoners are conducted
Here's why postmortem of executed prisoners are conducted

By

Published : Mar 22, 2020, 7:18 PM IST

டெல்லி: 2012ஆம் ஆண்டு டெல்லியல் நடந்த பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கின் நான்கு குற்றவாளிகள் இறுதியாக வெள்ளிக்கிழமை காலை தூக்கிலிடப்பட்டனர். இது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடிய நீதிமன்றப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

நிர்பயா குற்றவாளிகளின் உடற்கூறாய்வு அறிக்கை, குற்றவாளிகளின் மரணம் மூச்சுத்திணறல் காரணமாக நேர்ந்தது எனக் கூறியுள்ளது. "நான்கு குற்றவாளிகளின் உடற்கூறாய்வில், அவர்கள் இறப்பு மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்டது தெரியவந்தது. அவர்கள் கழுத்து எலும்பு முறிவுக்கு ஆளானதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் காரணமாக மூளை, முதுகெலும்பு போன்ற உள் உறுப்புகள் சேதமடைந்து அவர்கள் இறந்தனர்" என்று உடற்கூறாய்வை மேற்கொண்ட மருத்துவர் கூறினார்.

ஆனால் இறந்த கைதிகளுக்கு ஏன் உடற்கூறாய்வு நடத்தப்படுகிறது?

2014 ஜனவரியில் சத்ருகன் சவுகான் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப கைதிகளுக்கும் உடற்கூறாய்வு செய்யப்பட்டுவருகிறது.

உடற்கூறாய்வைக் கட்டாயமாக்குவதன் மூலம், குற்றவாளியின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்றும், இது தூக்கிலிடப்பட்ட நபர் கழுத்து எலும்பு உடைந்ததன் விளைவாக இறந்தாரா அல்லது கழுத்து நெரிக்கப்படுவதன் மூலம் இறந்தாரா என்பதை தெளிவுபடுத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியிருந்தது.

"நமது அரசியலமைப்புச் சட்டம் சரியானதாகவும் நியாயமானதாகவும் உள்ள நடைமுறை மூலம் மட்டுமே மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கிறது" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கே.சி. கௌசிக், "சத்ருகன் சவுகான் மற்றும் இந்திய யூனியன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு மரண தண்டனை குற்றவாளிகளின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது" என்று கூறியுள்ளனர்.

சிறைகளில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர், சட்டப்படி உடற்கூறாய்வு நடத்தப்பட வேண்டும் என்று சத்ருகன் சவுகான் தீர்ப்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கௌசிக் கூறினார்.

சத்ருகன் சவுகான் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது

சத்ருகன் சவுகான் மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கின் தீர்ப்பு ஒரு முக்கிய தீர்ப்பு. இது மரண தண்டனை தொடர்பான பல வழிமுறைகளை வரையறுத்து, இப்போது அனைத்துச் சிறை கையேடுகளிலும் இது பின்பற்றப்படுகிறது என்று திஹார் சிறை அலுவலர்கள் கூறினர்.

"திஹார் சிறையில் வெள்ளிக்கிழமை காலை தூக்கிலிடப்பட்ட நான்கு நிர்பயா குற்றவாளிகளின் உடல்கள் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்” என்று ஒரு அலுவலர் தெரிவித்தார்.

அதிகாலை 5:30 மணியளவில் தூக்கிலிடப்பட்ட பின்னர், சடலங்கள் காலை 8:20 மணியளவில் உடற்கூறாய்விற்காக திஹார் சிறையிலிருந்து தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

2012 நிர்பயா கும்பல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அக்‌ஷய் சிங் தாக்கூர், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.

2012 டிசம்பர் 16ஆம் தேதி இரவு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவியை ஒரு சிறுவன் உள்பட ஆறு பேர் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி செய்த வழக்காக நடைபெற்றது. சில நாள்களுக்குப் பிறகு அந்தப் பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விசாரணையின்போதே சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் சம்பந்தப்பட்ட சிறுவன் மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறகு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளின் இறுதி நிமிடங்கள்!

ABOUT THE AUTHOR

...view details