தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேலைவாய்ப்பை உருவாக்க ராகுல் கூறும் 4 ஐடியாக்கள்! - Rahul

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நான்கு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

By

Published : Mar 29, 2019, 10:33 AM IST

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குகளைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பரப்புரையில் ஒருபுறம் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தாலும் மற்றொருபுறம் மக்களின் அன்றாட பிரச்னையான கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவை குறித்து பேசி வருகிறார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வரும் வேளையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இளைஞர்களே, புதிய தொழில் தொடங்க வேண்டுமா? வேலைவாய்ப்பை உருவாக்க நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்கானத் திட்டம்:

  1. புதிய தொழில் தொடங்கினால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியமில்லை
  2. ஏஞ்சல் வரியிலிருந்து விடுதலை
  3. நிறுவனங்களுக்கு ஏற்படுத்தும் வேலைவாய்ப்புக்கு ஏற்ப சிறப்பு சலுகைகள், வரி சலுகைகள்
  4. எளிதாக வங்கி கடன் பெறும் வசதி

இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய தொழில்களுக்கு வெளி முதலீட்டாளர்கள் பணம் வழங்கும்போது ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது. ராகுல் இதனை முழுவதும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அதேபோல், வங்கி கடன், வரி சலுகை ஆகியவை நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக அவர், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் நியாய் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களின் வாக்குகளை கவரும் விதமாக ராகுல் காந்தி இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details