டீ உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என பலர் கூறி வருகின்றனர். ஆனால் அதையும் தாண்டி டீ இல்லாமல் வாழ்வே இல்லை என பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஆரோக்கியமான டீ வகைகளை அருந்துவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவரான யாஸ்மின். பல்வேறு வகையான டீ அருந்துவதன் மூலம் நமக்கு என்ன மாதிரி நன்மைகள் கிடைக்கும் என விவரிக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு.
ரோஸ் டீ: காய்ந்த ரோஜா இதழ்கள் நான்கு முதல் ஐந்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு கிராம் கொத்தமல்லி விதை மற்றும் சிறிதளவு குங்கும பூ, அரை கிராம் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடிக்கவும். இது நிற மேன்மைக்கும் செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
துளசி இலை டீ: துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்க்கவும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஏலக்கா டீ: தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து தினமும் சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.