ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்றது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகிய ஆறு முதலமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.