தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சோனியா காந்தியுடன், ஹேமந்த் சோரன் சந்திப்பு - Jharkhand election

டெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி (ஜே.எம்.எம்.) தலைவர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

Hemant Soren meets Sonia Gandhi, invite her for his swearing-in as J'khand CM
Hemant Soren meets Sonia Gandhi, invite her for his swearing-in as J'khand CM

By

Published : Dec 25, 2019, 10:48 PM IST

ஜார்க்கண்ட் சட்டபேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன், டிச.29ஆம் தேதி பதவியேற்கிறார்.

இந்நிலையில் இன்று அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தார்.

81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜே.எம்.எம். மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றிப்பெற்றது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜே.எம்.எம்.) 30 தொகுதிகளில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் மக்கள் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்’

ABOUT THE AUTHOR

...view details