தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடிக்கு நன்றி தெரிவித்த நடிகை...! ஏன் தெரியுமா? - தெரிவித்த

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரபல திரைப்பட நடிகை ஹேம மாலினி தெரிவித்துள்ளார். பாஜக மக்களவை உறுப்பினர் ஹேம மாலினி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவித்துள்ளார்.

dga

By

Published : Mar 22, 2019, 10:23 AM IST

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சரும், அக்கட்சியின் மூத்தத் தலைவருமான ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்டார். இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியில் மீண்டும் ஹேம மாலினி களமிறக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தன்னை மீண்டும் அதே தொகுதியில் களமிறக்கிய பிரதமர் மோடிக்கும், தலைவர் அமித் ஷாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். தன்னை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த மதுரா தொகுதி மக்களுக்கும் தனது நன்றியைக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரா தொகுதியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வேன் என்றார்.

2014ஆம் ஆண்டு மதுரா தொகுதியில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் முக்கியப் பிரமுகரான ஜெயந்த் சவுத்ரியை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஹேம மாலினி வெற்றி பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details