மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் கடும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் தகித்து கொண்டிருக்கிறது.
மோடி வரவில்லையென்றால் ஆபத்து ஏற்படும்: நடிகை ஹேமமாலினி - மோடி
லக்னோ: மோடி மீண்டும் பிரதமராக வராவிட்டால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
ஹேம மாலினி
அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேம மாலினி தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”மோடிக்கு இருக்கும் துணிவு கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்களுக்கு கிடையாது. மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும், அவர் வெற்றி பெறாமல் வேறு யாராவது வென்றால் அது நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என்றார்.