ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிராக நாடு முழுவதும் பரப்புரை தொடங்குவதற்கு முன்பே ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் தொடங்கிவிட்டது. தூய்மை ஆல்வார் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் இணைந்து வீதிகளில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு பல தன்னார்வலர்களின் ஆர்வத்தின் வெளிப்பாடாக உதவும் கரங்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. 106 வாரங்களாக இந்த இயக்கம் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுவருகிறது.
இதுகுறித்து தன்னார்வலர் விமல் கூறுகையில், "எங்கள் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தூர் தொடர்ந்து முதலிடம் வகித்துவருகிறது. இந்தூர் நகரம்போல் ஆல்வார் இருக்க வேண்டும். இதற்கு எங்கள் இயக்கம் எடுத்த முயற்சியை ஆல்வாரில் கண்கூடாக பார்க்கலாம்.