தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்' - பிரியங்கா காந்தி - காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு கோரிக்கை

டெல்லி: அசாம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

priyanka-appeals-to-congress-leaders-workers
priyanka-appeals-to-congress-leaders-workers

By

Published : Jul 20, 2020, 7:57 PM IST

அசாம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலங்களிலுள்ள பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்காண மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அதனால் அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெள்ள பாதிப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அசாம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: தீவுபோல் காட்சியளிக்கும் கிராமம்!

ABOUT THE AUTHOR

...view details