ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலிருந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள யெலஹங்கா என்னும் பகுதிக்கு அடிமைகளாகக் கடத்திவரப்பட்ட 204 பேரை தொழிலாளர் துறை அலுவலர்கள் மீட்டனர். அடிமைகளாகக் கடத்திவரப்பட்டவர்களில் 40 பேர் குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து மனித கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை உள்ளிட்ட சட்டங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.