கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள குருவாயூரை சேர்ந்த ரெஞ்சு ரெஞ்சி என்ற திருநங்கை தத்தெடுத்த திருநங்கை ஹெய்டி சாடியா. இவர் கேரளாவிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவருகிறார்.
நாட்டின் முதல் திருநங்கை பத்திரிகையாளரான இவருக்கும், ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிப்பாட் பகுதியைச் சேர்ந்த அதர்வ் மோகன் என்பவருக்கும் எர்ணாகுளத்தில் இன்று (ஜனவரி 26) திருமணம் நடைபெற்றது. அதர்வ் மோகன், திருநங்கை ஜோடியானா சூர்யா மற்றும் இஷான் தம்பதியின் வளர்ப்பு மகனாவார்.