தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய வருடத்தின் முதல் பனிப்பொழிவு - காண்போரை கவரும் சிக்கிம்!

கேங்டாக்: டார்ஜிலிங் , சிக்கிம் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Heavy snowfall
பனிப்பொழிவு

By

Published : Jan 4, 2020, 3:33 PM IST

மக்கள் என்னதான் குளிர்கிறது என்று பெட்ஷீட்டால் மூடிக்கொண்டாலும், ஜெர்கின் அணிந்துகொண்டு வெளியே சென்றாலும், சுற்றுலா செல்லலாம் என்று முடிவு எடுத்தால், மிகவும் குளிர் அதிகமாக இருக்கும் இடங்களை தேர்வு செய்து செல்லவே விரும்புகிறார்கள். அவ்வாறு, அட்வென்சர் விரும்பும் மக்களுக்காகவே புதிய ஆண்டில் குதூகலமாக பொழுதை கழிப்பதற்கு சரியான இடமாக சிக்கிம் உள்ளது. இந்த புதிய வருடத்தின் முதல் பனிப்பொழிவு என்ற பெருமையை சிக்கிம் பெற்றுள்ளது.

ஆனால், சிக்கிமில் தற்போது பனி பொழிவு அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல சுற்றுலாப் பயணிகளும் பனியில் சிக்கித் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிக்கிமின் வானிலை நிலவரத்தின்படி, வடக்கு சிக்கிம் மற்றும் கிழக்கு சிக்கிம் பகுதிகளில் விரைவில் அதிகப்படியான பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்ப்பாரக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வருடத்தின் முதல் பனிப்பொழிவு

அதே போல், டார்ஜிலிங்கில் டோட்ரியின் பகுதியிலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் பனிப்பொழிவை ரசித்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: எலைட் வேர்ல்ட் ரெக்கார்டில் புதிய மைல்கல்லை பதித்த தமிழர்!

ABOUT THE AUTHOR

...view details