கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடரும் மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடரும் மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கேரளாவில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுபவர்களையும் தயார் நிலையில் இருக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கொச்சி சர்வதேச விமான நிலையம் இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.