மகாராஷ்டிரா தலைநகர் மும்பை, அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் சென்ற வாரம் முதல் பெய்த கனமழை காரணமாகப் பிராதான பகுதிகளில் நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. கனமழை காரணமாக மும்பையின் முக்கிய போக்குவரத்து சாதனமான புறநகர் ரயில் சேவைகள் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயங்குகிறது.
மும்பையில் தொடரும் கனமழை - இயல்பு வழக்கை பாதிப்பு! - கன மழை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என்று வனிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே துறையின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் உதசி கூறுகையில், கனமழை காரணமாக புறநகர் ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இருப்பினும், இந்த மழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் எந்த நடவடிக்கைகளும் பாதிக்கப்படவில்லை.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றும் நாளையும் மும்பையில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் அதிகபட்சமாக டிண்டோஷி பகுதியில் 50 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. மேலும் மும்பையில் கனமழைக்கு உதவி எண்ணாக 1916 அறிவிக்கப்பட்டுள்ளது.