தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடர் மழையால் மூழ்கிய மும்பை; ரயில்கள் ரத்து! - Heavy Rain In Mumbai

மகாராஷ்டிரா: பலத்த மழையால் மும்பையின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

பருவமழை

By

Published : Jul 1, 2019, 1:13 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதித்ததோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மும்பையில் ரயில் நிலையங்களிலும், ரயில் வழித்தடங்களிலும் மழைநீர் அதிகமாக சூழ்ந்துள்ளதால் இதுவரை 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் உதவி எண்களை வழங்கியுள்ளது.

தொடர் மழையால் மூழ்கிய மும்பை

சாலைகளில் மழைநீர் அதிகமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details