சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹரியானா மாநில எல்லை பகுதியில் குவிந்தனர். அவர்கள் டெல்லிக்கு பேரணியாக செல்ல முயற்சித்தனர். ஆனால், அவர்களை தடுக்கும் விதமாக பாஜக ஆளும் ஹரியானாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர். நவம்பர் 26ஆம் தேதி, தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் 2,00,000 விவசாயிகள் கலந்து கொள்ளவுள்ளனர். பஞ்சாப் விவசாயிகளை தடுக்கும் நோக்கில் எல்லை பகுதிகளை மூட ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாரதிய கிசான் சங்க தலைவர் பல்பிர் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பதை ஹரியானா முதலமைச்சர் நிரூபணம் செய்துள்ளார். இதுகுறித்து பல்பிர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் செல்லும் பகுதிகளில் அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். சாலைகளிலேயே தர்ணாவை மேற்கொள்வோம்" என பதிவிட்டுள்ளார்.