மகாராஷ்டிரா கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் தொடரும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - Karnataka Rain
மும்பை: மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் தொடரும் மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மேலும் பல மாவட்டங்களில் அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்கலி மாவட்டங்களில் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.