தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசாவில் மாவேயிஸ்டு அடித்துக் கொலை : ராணுவம் குவிப்பு - மல்கஞ்கிரி ராணுவம் குவிப்பு

புவனேஸ்வர் : ஒடிசாவின் மல்கஞ்கிரி மாவட்டத்தில் மாவோஸ்டு பயங்கரவாதி அடித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தில் பலத்த ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

odisha maoist
odisha maoist

By

Published : Jan 28, 2020, 11:25 PM IST

ஒடிசாவின் மல்கஞ்கிரி மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தையொட்டி கிராகொன்டா என்ற பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்த இடம் மாவோயிஸ்டுகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது.

இரண்டு நாள்களுக்கு முன்னர், இரண்டு மாவோஸ்டு பயங்கரவாதிகள் இப்பகுதியில் வாழும் கிராமத்தினரைச் சந்தித்து குடியுரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என எச்சரிக்கும் பாணியில் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள், ஒன்றுகூடி அவர்களை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றி பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

"இப்பகுதி மக்கள் மாவோஸ்டுகள் மீதான அச்சத்தில் அவர்களுக்கு உதவிவந்தனர். ஆனால் குருபியா பாலம் கட்டப்படுவதன் பொருட்டு அங்கு ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால் மாவோஸ்டுகளை எதிர்த்து மக்கள் துணித்துள்ளனர்" என மல்கஞ்கிரி காவல் துறை கண்காணிப்பாளர் ஆர் டி கிலாரி தெரிவித்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படை, ஒடிசா சிறப்பு காமாண்டோஸ் படை, இந்திய ரிசவ் படை ஆகிய படைகளின் ராணுவத்தினர், ஜாதாம்பா, ஜான்துராய், சிந்திபேடா, திரகாபாடா ஆகிய கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜாதான்பா கிராமத்துக்குள் நுழைந்த அந்த இயக்கத்தினர் வீடுகளைச் சேதப்படுதியதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என மல்கஞ்கிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த மாவோஸ்டு பயங்கரவாதி கலிமேலா பகுதியைச் சேர்ந்த கங்கா தாரி என்றும், காயமடைந்தவர் நாராயபட்னா பகுதியைச் சேர்ந்த ஜிப்ரா ஹட்ரிகா என்றும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் இந்து கோயில் சூறையாடல் : 4 சிறுவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details