தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மே 28ஆம் தேதிக்குப் பிறகு தான் வெப்பம் குறைய வாய்ப்பு' - இந்திய வானிலை ஆய்வுமையம் - Heatwave likely to abate only after May 28: IMD

டெல்லி: வட இந்தியாவில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வருகிற 29,30ஆம் தேதிகளில் புழுதிப் புயல், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மே 28ஆம் தேதிக்குப் பிறகு, வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heatwave
Heatwave

By

Published : May 25, 2020, 11:53 PM IST

வட இந்தியாவில் வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக நாளை வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும்; காலை 10 மணிக்குப்பிறகு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் வெயில் 45 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக இருந்தது. ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற 29,30ஆம் தேதிகளில் புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும்; தற்போது நிலவி வரும் வெப்பத்தைத் தணிக்க, இந்த வானிலை உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 28ஆம் தேதிக்குப் பிறகு, வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details