கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயிலானது, வரும் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டை போலவே மற்ற மாநிலங்களையும் வெயில் கடுமையாக வாட்டிவருகிறது. கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.