ஒவ்வொரு தேசமும் தனது குழந்தைகளை உண்மையான சொத்துக்களாக கருதுகின்றன, ஏனெனில் அவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். இருப்பினும், இந்தியாவில் குழந்தை இறப்புகளில் 27 சதவிகிதம் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே 21 சதவிகித இறப்புகளும் இருக்கும் சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டது. ராஜஸ்தான் மாவட்டம் கோட்டாவின் துயரமான சம்பவங்கள் இதற்கு ஒரு புதிய சான்றாகும். இதுவரை, கோட்டா தற்போதைய மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவின் தொகுதியாக அறியப்பட்டது. ஆனால் தற்போது குழந்தைகளின் தொடர் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதன் மூலம் அறியப்படுகிறது.
ஹெல்த்கேர் மையங்களா அல்லது கொலைக்களங்களா? இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் அவசர சிகிச்சைக்காக கோட்டா நகரில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். 2019 டிசம்பர் மாதத்தில் மட்டும் ஒரே மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளனர் என்பது ஆபத்தானது. அதிகரித்துவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.ஆர்) மருத்துவமனையை பரிசோதித்து, சென்ற ஆண்டில் மருத்துவமனையில் மொத்தம் 940 மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
மாநில அரசு இந்தப் பிரச்னையை இருக்கும் கோட்டுக்கு இணையாக ஒரு பெரிய கோடாக காட்டி கேவலப்படுத்த முயன்றது. ஒரு வருடத்தில் 1,300-1,500 இறப்புகளை மருத்துவமனை கண்ட சம்பவங்கள் இருப்பதாக வெட்கமின்றி ஒப்புக்கொண்டது. உண்மையில், முதலமைச்சர் அசோக் கெலாட் தற்போதைய இறப்பு எண்ணிக்கை வழக்கமான போக்குதான் என்று குறிப்பிட்டார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், இத்தனை ஆண்டுகளில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? இந்த கேள்விக்கு அரசியல்வாதிகள் யாரிடமும் பதில் இல்லை என்று தெரிகிறது.
என்.சி.பி.ஆர் ஆய்வுக்குப் பிறகுதான், ஜே.கே.லோன் மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பற்றிய பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அவசரகால மருத்துவ உபகரணங்களான வார்மர்கள், நெபுலைசர்கள் மற்றும் வென்டிலேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை செயல்படாதவை என்று ஆணையம் கண்டறிந்தது. மருத்துவமனை வளாகத்தை சுற்றி பன்றிகள் சுற்றித் திரிவதைக் கண்டு கமிஷன் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், நிகழ்வுகள் குறித்து ஆராய மருத்துவமனை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட குழுவோ முறையான அல்லது உள்கட்டமைப்பு அலட்சியப் போக்கு என்ற கருத்தை நிராகரித்துள்ளது. மருத்துவ சாதனங்கள் முழுமையாக செயல்படுவதாக கூட அது அறிவித்தது. ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களை இழந்தும் மருத்துவமனையின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்கான குழுவின் ஆர்வம் அதன் அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) இந்த விஷயத்தை தன்வயமாக எடுத்துக்கொண்டு ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஊடகச் செய்தி அறிக்கைகள் உண்மையாக இருந்தால், அவை அரசாங்கத்தால் நடத்தப்படும் ஜே.கே.லோன் மருத்துவமனையில் கடுமையான மனித உரிமை மீறல்களையே சுட்டிக்காட்டுகின்றன என்று ஆணையம் கூறியது. ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் நிர்வாகம் பிரச்னையை மறைக்க முயன்ற போதிலும், முதலமைச்சரின் நீதிசார்ந்த விளக்கம் இல்லாமல் என்.எச்.ஆர்.சி பின்வாங்காது. இந்தியாவில் பொது சுகாதாரத்தின் மோசமான நிலைமைகள் அண்மைக் காலங்களில் பீகாரில் என்செபலிடிஸ் பரவல் மற்றும் உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மருத்துவமனை பயங்கரம் போன்றவற்றிலும் தலைப்புச் செய்திகளாக அமைந்தன.
பொது மக்களால் மூளை காய்ச்சல் என்றும் குறிப்பிடப்படுகிற தீவிர என்செபாலிடிஸ் நோய்க்குறி (ஏஇஎஸ்) முசாபர்பூரிலிருந்து பீகாரில் உள்ள 18 மாவட்டங்களுக்கு வேகமாக பரவியது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்த போதிலும், இந்தத் துயரம் குறித்து அரசாங்கத்தின் அக்கறையின்மையே வெளிப்படுகிறது. இதே அலட்சியம் அண்மையில் ராஜஸ்தானில் நடந்தபோது சுகாதார பேரழிவிற்கு வழிவகுத்தது.
மருத்துவ நிறுவனக் குழந்தை பிறப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பல முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்த மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுத்தது. இந்த பரிந்துரைக்குப் பிறகு 4 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் குழந்தை இறப்பு விகிதத்தில் எந்த சரிவும் இல்லை. எந்தவொரு நகரத்திலும் அல்லது மாநிலத்திலும் தரமற்ற அரசு மருத்துவமனைகள் இல்லாமல் இல்லை. ஊழியர்கள், அவசரகால மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகளின் கடுமையான பற்றாக்குறையுடன்; அவை குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்பதை நிரூபிக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, குறைப்பிரசவங்கள் மற்றும் இரத்த சோகை போன்ற அமைப்பு ரீதியான குறைப்பாடுகள், குறிப்பாக குறைந்த வருமானம் மக்களை பாதிக்கின்றன. அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி, மொத்த குழந்தை இறப்புகளில் ஐம்பது விழுக்காடு பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் அசாமைச் சேர்ந்த 115 மாவட்டங்களில் நிகழ்கின்றன.
இந்த புள்ளிவிவரங்கள் நம் குழந்தைகளைப் பாதுகாப்பதில் ஒரு தேசமாக நாம் எவ்வாறு தோல்வியுற்றோம் என்பதை நிரூபிக்கின்றன. அண்டை நாடுகளான சீனா, இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா சுகாதார அணுகல் மற்றும் தர குறியீட்டில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. குடிமக்களுக்கு சுகாதாரத்துக்கான முதன்மை உரிமையை மறுக்க அரசாங்கங்கள் முடிவு செய்தால், அரசு நடத்தும் மருத்துவமனைகள் திறம்பட செயல்படும் என்று ஒருவர் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்கும், புதிதாகப் பிறந்த, தாய்மைவழி இறப்புகளைக் குறைப்பதற்கும் தேசிய சுகாதாரத் திட்டம் (என்.எச்.எம்) தொடங்கப்பட்டது. சமீப காலங்களில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பொது உயர் நீதிமன்றம் என்ஹெச்எம் மேற்கொண்ட உண்மையான பணிகள் குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை விசாரித்தது. ஆயிரக்கணக்கான அங்கன்வாடி மையங்கள், கிராமப்புற சுகாதார பணிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் நிறைய இருப்பினும் பொது சுகாதாரப் பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்ய சரியான செயற்பாட்டில் எதுவும் இல்லை. கிராமப்புறங்களில் கைக்குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களில் 54 சதவீதம் பேர் மிகவும் தகுதியற்றவர்கள் என்று சமீபத்திய ஆய்வில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோடா மக்களைவை உறுப்பினர் ஓம். பிர்லா கோட்டா, கோரக்பூர் மற்றும் முசாபர்பூர் போன்ற சோகங்கள் ஏற்பட்டால்; குழுக்களை அமைப்பது அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குவது மட்டும் பிரச்சினையைத் தீர்க்காது. காலியிடங்களை நிரப்ப மருத்துவ ஊழியர்களை நியமித்தல், அடிப்படை வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்தல் ஆகியவையே தீர்வாக இருக்கும். மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சுகாதார மையமும் சாத்தியமான விளைவுகளுக்கு பொறுப்பாக்கப் படவேண்டும் அமைப்புமுறை மாற்றங்கள் ஒரு கானல் நீராக இருக்கும் வரை, பொது சுகாதாரத் துயரங்களைத் தடுக்க முடியாது.
இதையும் படிங்க...கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றிய டிஐஜி - துடிதுடித்த ராணுவ வீரர்!