தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: அலுவலகங்களுக்கான நிலையான இயக்க நெறிமுறைகள் வெளியீடு! - கரோனா: அலுவலகங்களுக்கான நிலையான இயக்க நெறிமுறைகள் வெளியீடு!

டெல்லி: அலுவலகங்களில் கரோனா பரவலைத் தடுக்க நிலையான இயக்க நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Union Health Ministry SOPs for offices Standard Operating Protocol Coronavirus lockdown அலுவலகங்கள் நிலையான இயக்க நெறிமுறை மத்திய அரசு
அலுவலகங்களுக்கான நிலையான இயக்க நெறிமுறை

By

Published : Jun 5, 2020, 5:46 AM IST

மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறையின்படி, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களிலுள்ள அலுவலகங்கள் பூட்டியே இருக்கவேண்டும் எனக் கூறியுள்ள மத்திய அரசு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியே உள்ள அலுவலகங்களைத் திறக்க அனுமதியளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் அடிப்படையான செயல்முறைகளை பட்டியலிட்டுள்ள மத்திய அரசு, கரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்பு மேற்கொள்ள வேண்டியவை குறித்து வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. அதன்படி,

  1. 'ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நிலையான இயக்க நெறிமுறைகளின் படி, தொற்று பாதிக்கப்பட்டவர் இருந்த அறையிலிருந்த மற்ற ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
  2. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ சுகாதார நிலையங்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
  3. கரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதை சுகாதார அலுவலர்கள் உறுதி செய்தால், அவர் தனிமைப்படுத்தப்படுவார்.
  4. சந்தேகிக்கப்படும் நபருக்கு கடுமையான அறிகுறிகள் இருந்தால், சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி, அவருக்கு சிகிச்சையளிக்கப்படும்.
  5. தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' எனத் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details