இந்தியாவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பின் ஒரு பகுதியாக ட்விட்டர் சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்திலிருந்தே தெரிந்துகொள்ளும் விதமாக மத்திய அரசு இந்த ட்விட்டர் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பேசுகையில், இந்தியா கரோனவுக்கு எதிராக பேராடி வருகிறது. இந்த சூழலில் எந்தவொரு குடிமகனும் கரோனா தொடர்பான ஐயத்துடன் இருக்ககூடாது என்ற நோக்கில் மத்திய அரசு மருத்துவ நிபுணர் குழு சார்பில் @CovidIndiaSeva ட்விட்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது.