புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வெளியிட்டுள்ள காணொலியில், ” புதுச்சேரியில் நேற்று 558 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதுச்சேரியில் 28 பேர், மாஹேவில் மூன்று பேர் என 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கரோனா உறுதி - puducherry health minister mallady krishnarao
புதுச்சேரி: இன்று ஒரே நாளில் 31 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 714 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
இதுவரை 430 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவிலிருந்து 272 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நேற்று (ஜூன் 29) 38 வயதான ஒருவர், இந்திராகாந்தி அரசு மருத்துமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறைந்து வருகின்றனர். இருந்தபோதிலும், பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை-மகன் உடற்கூறாய்வு அறிக்கை சமர்ப்பிப்பு!