சர்வதேச அளவில் ஏற்படும் தொற்று நோய்கள், அதைத் தடுக்கும் வழிமுறைகளை உள்ளிட்டவை குறித்து உலக நாடுகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் பொறுப்பு உலக சுகாதார அமைப்பினுடையது.
இந்த உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவில் தற்போது 34 நாடுகள் உள்ளன. இந்த செயற்குழுவின் தலைவராக தற்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோகி நகாடானி என்பர் உள்ளார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் 73ஆவது வருடாந்திர பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் அடுத்த ஓராண்டு காலத்திற்கு செயற்குழு தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: ஊதியம் வழங்காமல் 300 செவிலியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்