கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட, மாநில எல்லைகள் உள்பட நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாபூரில் தலைமை உதவி ஆய்வாளர் ஒருவர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவரை ஒழுங்காகப் பணிபுரியுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காவலர் தலைமை உதவி ஆய்வாளரை லத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் நடந்த ஒருசில மணி நேரத்திற்குள்ளாகவே சமூக வலைதளங்களில் வேகமாக இந்த வீடியோ பரவத் தொடங்கியது.