ஜம்மு காஷ்மீரில் கோகோ கோலா என்ற தனியார் குளிர்பான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிறுவனம் விரைவில் மூடப்பட உள்ளது. இதற்கான முடிவை நிறுவனத்தின் உரிமையாளர் எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பணி இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கந்தாரி லாலா என்ற நிறுவனத்தின் ஊழியர்களும் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இதுகுறித்து அமன் சிங் என்பவர் கூறுகையில், “கந்தாரி லாலா நிறுவனம் மற்றொருவருக்கு விற்கப்பட்டுள்ளது. இதுபற்றி எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. நாங்கள் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் கிடையாது. ஆனாலும் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் தனியார் குளிர்பான தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் ஜம்மு காஷ்மீர் யூனியனில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய வாருங்கள் என அரசு அழைப்பு விடுத்து வருகிறது. இதற்கிடையில் அங்குள்ள நிறுவனங்கள் வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: தம்பி அந்த வெப்சைட் பேர் என்னப்பா' - ஆபாச படம் பார்த்த இளைஞரை மிரட்டும் போலி போலீஸ்!