தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2020, 1:51 PM IST

ETV Bharat / bharat

டெல்லி கலவர சிசிடிவி பாதுகாப்பு தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

டெல்லி: தலைநகர் கலவரம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க உத்தரவிடுமாறு கோரியிருந்த மனுவில் மத்திய மாநில அரசுகள், காவல் துறையினர் பதிலளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

delhi violence cctv fottage
delhi violence cctv fottage

டெல்லி வடகிழக்குப் பகுதிகளில் 2020 பிப்ரவரி 24ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் காவலர், உளவுத் துறை அலுவலர் ஆகிய இரண்டு பேர் உள்பட 53 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

  • கலவரம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க டெல்லி காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்,
  • கலவரத்தில் ஈடுபட்டோர் மீது எஃப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்,
  • கலவரம் குறித்து விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஜாமியாத் அலாமா-இ-இந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.என். பட்டேல், சி. ஹரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அது குறித்து பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசு, டெல்லி அரசு, டெல்லி காவல் துறையினருக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : ஒரே நாளில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கார்! - லாட்டரியில் வண்டி இழுப்பவருக்கு அடித்த ஜாக்பாட்!

ABOUT THE AUTHOR

...view details