புதுச்சேரியில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த லட்சுமி யானையை கொடுமைப்படுத்துவதாக பீட்டா அமைப்பு அளித்த புகாரின் பேரில், யானையை புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்திலுள்ள பண்ணைக்கு வனத்துறையினர் கொண்டுச் சென்றனர்.
இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மீண்டும் அந்த யானையை கோயிலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், மீண்டும் யானை லட்சுமி கோயில் வளாகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது.