ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ மூலம் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எய்ம்ஸ் குழு அறிக்கை எதிரொலி: ப. சிதம்பரத்தின் ஜாமின் மனு நிராகரிப்பு! - ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
டெல்லி: ப. சிதம்பரத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவக் குழு கொடுத்த அறிக்கையால், அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு திரும்பினார். இதையடுத்து தற்போது ப. சிதம்பரத்திற்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்காக மூன்று நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கவேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதி, ப. சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றை எய்ம்ஸ் மருத்துவமனை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, இன்று ப. சிதம்பரத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை கொடுத்தது. அதனால், அவரது ஜாமின் மனு தற்போது நிராகரிக்கப்பட்டது.