தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகில் கோகோயின் பிணை மனுவைத்  தள்ளுபடி செய்த அஸ்ஸாம் உயர் நீதிமன்றம்!

கவுஹாத்தி : சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை ஒருங்கிணைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலரும், கே.எம்.எஸ்.எஸ். விவசாய அமைப்பின் தலைவருமான அகில் கோகோயின் பிணை மனுவை அஸ்ஸாம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அகில் கோகோயின் பிணை மனுவை  தள்ளுபடி செய்த அஸ்ஸாம் உயர் நீதிமன்றம்!
அகில் கோகோயின் பிணை மனுவை தள்ளுபடி செய்த அஸ்ஸாம் உயர் நீதிமன்றம்!

By

Published : Jan 7, 2021, 6:00 PM IST

அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திவந்த கிரிஷக் முக்தி சங்கிராம் சமிதி (கே.எம்.எஸ்.எஸ்.) என்ற விவசாய அமைப்பின் தலைவரும், ஆர்.டி.ஐ. ஆா்வலருமான அகில் கோகோய் 2019 டிசம்பர் 12ஆம் தேதி அன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.

அகில் கோகோயின் பிணை மனுவை தள்ளுபடி செய்த அஸ்ஸாம் உயர் நீதிமன்றம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் வாயிலாக நாட்டில் பயங்கரவாதத்தை பரப்ப முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மாவோயிஸ்ட் அமைப்புடன் அவருக்குத் தொடர்புகள் இருப்பதாகக் கூறி விசாரணை கைதியாகவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவரைச் சிறையில் அடைத்துவைத்துள்ளனர்.

இந்நிலையில், தன்னை பிணையில் விடுதலை செய்யும்படி கோரிக்கைவைத்த அகில் கோகோய், அஸ்ஸாம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அந்த மனுவானது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கல்யாண் ராய் சுரானா, அஜித் பாதகூர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (ஜன. 07) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்துள்ளதாக அறிய முடிகிறது.

முன்னதாக, அகில் கோகோயின் பிணை மனுவை சிறப்பு என்ஐஏ நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :முதோல் ரக நாயின் உதவியை கோரும் இந்திய விமானப்படை!

ABOUT THE AUTHOR

...view details