2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை 2018 மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாகித் உஸ்மான் பல்வா (Shahid Usman Balwa) உள்ளிட்ட மூன்று பேர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமலிருந்தனர். பலமுறை நினைவுபடுத்தியும் அவர்கள் பதிலளிக்காததையடுத்து மூவரும் தலா 1,500 மரக்கன்றுகளை டெல்லியில் நட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.