தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை என்.ஐ.ஏ. விசாரிக்கக் கோரி வழக்கு! - சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை என்ஐஏ விசாரிக்கக் கோரி வழக்கு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

HC
HC

By

Published : Feb 28, 2020, 7:26 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்த வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அஜய் கவுதம் என்பவர் தொடுத்த மனுவில், தேசத்திற்கு எதிராகச் செயல்படும் இந்திய மக்கள் முன்னணி என்ற அமைப்பு சமூகவிரோத போராட்டங்களுக்கு நிதி வழங்கியும் ஆதரவு அளித்தும்வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தாக்கல் செய்த மனுவில், "இது சாதாரண போராட்டம் இல்லை. தேசம், இந்து மதம் ஆகியவைக்கு எதிரான அமைப்புகள் இப்போராட்டங்களுக்கு பின்னணியில் உள்ளது. மற்ற நாடுகளின் பங்கு இதில் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை டி.என். படேல் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது குறித்து மத்திய அரசும் டெல்லி காவல் துறையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: 'ஹலோ... அமித் ஷாவா... எப்ப சார் வெளிய வருவீங்க?' - டெல்லி வன்முறை குறித்து சிவசேனா தாக்கு

ABOUT THE AUTHOR

...view details