அசாம் மாநிலம், கௌஹாத்தியை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் செய்து கொண்ட சிறிது நாள்களுக்குள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால், இருவரும் தனத்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண்ணின் கணவர் கெளஹாத்தி குடும்ப நல நீதிமன்றத்தில், தன் மனைவிக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றும், விவாகரத்து வழங்கக் கோரியும் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஆனால், நீதிபதிகள் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.