கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "கரோனா காலத்தில் பெற்ற மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை கைவிடவேண்டியது அவசியம்.
அனைத்து ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதுதான் வாழ்க்கை என்பதை இந்த பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. ஒரு நபரை பாதிக்கும் விவகாரம் அனைவரையும் பாதிக்கிறது. அது நோயாக இருந்தாலும் சரி பொருளாதாரமாக இருந்தாலும் சரி.
கோவிட்-19 பரவுவதற்கு முன்பு ஒவ்வொருவரும் தனியாக வாழமுடியும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். சமுதாயம், குடும்பத்தின் மதிப்பை குறைத்தாலும், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நம்பிக்கையாலும் மக்கள் தங்களால் தனியாக வாழ முடியும் என்று நம்பினர்.