தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமருடன் குடியரசு தின அணிவகுப்பை கண்டுகளிக்க இருக்கும் மாணவர்! - குடியரசு தின அணிவகுப்பை கண்டுகளிக்க உள்ள மாணவர்

இந்த ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பை பிரதமரின் பெட்டியிலிருந்து காண சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த கௌரவ் காட் என்னும் மாணவர் அழைக்கப்பட்டுள்ளார்.

hathras cbse topper invited for republic day
hathras cbse topper invited for republic day

By

Published : Jan 25, 2021, 11:58 PM IST

சிபிஎஸ்இ தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ள கௌரவ், மற்ற முன்னிலை மாணவர்களுடன் பிரதமர் மோடியுடன் அமர்ந்து குடியரசு தின அணிவகுப்பை கண்டுகளிக்க உள்ளார். இந்தநிலையில் அவரை கூட்டு நிதித்துறை நடுவர் பிரேம் பிரகாஷ் மீனா, நகராட்சி நிர்வாகத் தலைவர் ஆஷிஷ் ஷர்மா ஆகியோர் தலைநகருக்கு புறப்படும் முன் வரவேற்றனர்.

இது கௌரவின் கடின உழைப்புக்கும், மன உறுதிக்கும் கிடைத்த பலன் என்று அவரது பெற்றோர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய கௌரவ், "பிரதமரின் பெட்டியிலிருந்து குடியரசு தின அணிவகுப்பை பார்க்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற சாதனைக்காக இந்த மதிப்புக்குரிய அணிவகுப்புக்கு நான் அழைக்கப்பட்டுள்ளேன். நான் ஐஏஎஸ் அலுவலராக ஆசைப்படுகிறேன்" என்றார்.

நகராட்சி நிர்வாகத் தலைவர் ஆஷிஷ் ஷர்மா கூறுகையில், "குடியரசு தின அணிவகுப்புக்கு கௌரவ் அழைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். அவர் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அத்தகைய மாணவர்களுக்கு நிர்வாகம் அனைத்து உதவிகளையும் வழங்கும்" என குறிப்பிட்டார்.

இதையும் படிங்க... வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்!

ABOUT THE AUTHOR

...view details