மோடி - ஷா இணை
நரேந்திர மோடி - அமித் ஷா இணை ஏற்கெனவே தங்கள் உச்சத்தைத் தொட்டுவிட்டனர். 2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்த இந்த காவி இணை, அதன் பின் இறங்கு முகத்தையே சந்தித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு மிகச் சிறந்த தேர்தல் பரப்புரையால் ஆட்சியைப் பிடித்த பாஜக, சமீப காலங்களில் தேர்தல்களை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளதைப் போலத் தெரிகிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டபேரவைத் தேர்தல்களில் பாஜக சரிவைச் சந்தித்தது. அதன்பின் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுதாரித்துக்கொண்ட பாஜக, பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின் ஏற்பட்ட ஆணவத்தால், ஹரியானா மாநிலத்தில் வெற்றிபெற பாஜக தவறியது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்னரே கூட்டணியில் இருந்தபோதும், எதிர்பார்த்த வெற்றி பெற இயலவில்லை. இதனாலேயே தேர்தலுக்குப் பின் புதிதாக அமைந்த சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளிடம் பாஜக ஆட்சியை இழந்தது. தேர்தலின்போது களத்தில் வேலை செய்த பாஜகவினரை சிவசேனாவின் இந்த நம்பிக்கைத் துரோகம் பெரிதாக பாதிக்கவில்லை. மாறாக எதிர் தரப்பின் இந்த துரோகத்தை முறியடிக்கத் தவறிய தலைமையின் மீதே அவர்களது கோபம் திரும்பியுள்ளது. இதுதான் அவர்களை அதிகம் காயப்படுத்தியது.
மாநிலங்களை இழக்கும் பாஜக
பல தலைமுறைகளாக இதுபோன்ற அதிகாரப் போட்டியை நடத்துவதில் கில்லாடியான சரத்பவாரை எதிர்கொள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ்ஸால் முடியாது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் உள்ளே நுழைந்தபோதும் நிலைமை கையை மீறிவிட்டது. கட்சி தலைமைக்கும் ஒருவித நம்பிக்கையின்மை தோன்றிவிட்டது. கடந்த ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பெற வாய்ப்பிருந்தும், கமல்நாத்திடம் ஆட்சியை பாஜகவினர் இழந்தனர். அதேபோன்ற அக்கறையில்லா தன்மைதான், பாஜகவிடம் மகாராஷ்டிராவிலும் காணப்பட்டது.
மத்திய பாஜக தலைமையே மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சௌவகானின் ஆட்சியைத் தொடர்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் இழந்தது. இது பாஜக தலைவர்களிடமிருந்து முரண்பாடுகளைக் காட்டியது. ஆனால், எளிதில் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும் என்ற நிலை இருந்தபோது, நாட்டின் மிக முக்கிய ஒரு மாநிலத்தை இழந்திருப்பது அக்கட்சிக்கு நல்லதல்ல. ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களை இழப்பதைப் பற்றி அதிகாரத்திலிருக்கும் மோடி - ஷா இணை கவலைப்படுவதில்லை என்ற எண்ணத்தை வளர்க்கக்கூடாது. இது ஒரு சில மாநிலங்களின் வெற்றி தோல்வியைப் பற்றிய விவகாரம் மட்டுமில்லை, ஏனென்றால் பாஜக தற்போது மொத்தமுள்ள மாநிலங்களில் பாதிக்கும் குறைவான மாநிலங்களிலேயே ஆட்சியில் உள்ளது.
காரணங்கள் என்ன?
இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம், ஒன்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசை நிர்வகிப்பதிலேயே தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார். தன்னை ஒரு மூத்த அரசியல்வாதியாகக் கருதும் நரேந்திர மோடி, சூழ்ச்சியையும் தந்திரங்களையும் கையாண்டு ஆட்சியைப் பிடித்து தன் கைகளை அழுக்குப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை... கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்திலும், கடந்த மாதம் மகாராஷ்டிராவிலும் நடைபெற்றதை போல. வலுவான பாஜக மட்டும் இதற்கான தீர்வில்லை, மோடி இல்லாத வலுவான பாஜகவை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது.
மற்றொன்று, அமித் ஷா போன்ற தலைசிறந்த ஒரு நிர்வாகி, முக்கியமான உள்துறையையும் நிர்வகிப்பதால், அவரால் கட்சிக்குத் தேவையான பணிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. தற்போது பாஜக செயல் தலைவராகவுள்ள ஜே.பி. நட்டாவின் நிர்வாகத்தன்மையும் தேர்தலில் வெற்றி பெறும் திறமையும் இன்னும் சோதிக்கப்படவில்லை. கட்சிக்குத் தேவைப்படும் நேரத்தை அமித் ஷா ஒதுக்கும்போதும், தனது உள்துறையைத் தவிர பிற துறைகளையும் அவர் மேற்பார்வையிட வேண்டியுள்ளதால், கட்சிப் பணிக்குத் தேவையான நேரத்தை அவரால் ஒதுக்க முடியவில்லை.
இதையும் படிங்க: முத்ரா திட்டமும், பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும்!
ஆபத்தில் பாஜக?