ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில், பாஜக தலைவரும் மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா பேசுகையில், “காங்கிரஸ் கட்சி மூன்று பரிணாம கொள்கையைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதோரா, அவரின் தரகர்கள் ஆகியோருக்கு மட்டும் நன்மையளிக்கும் கொள்கைகளாக உள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.
ஊழல் ஆட்சியை மட்டுமே காங். தர முடியும் - அமித்ஷா சாடல்
சண்டிகர்: காங்கிரஸ் கட்சியால் ஊழல் ஆட்சியை மட்டுமே மக்களுக்கு வழங்க முடியும் என ஹரியானா மாநில தேர்தல் பரப்புரையில் பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
amith shah
துப்பாக்கிச் சுடுதலில் அட்டகாசம் செய்த 'தல' அஜித்
மேலும், நீங்கள் ஊழல் மிகுந்த அரசை விரும்புகிறீர்களா? காந்தி குடும்பத்தின் மருமகனுக்காகச் செயல்படும் அரசு வேண்டுமா? இல்லை ஊழலற்ற நல்லாட்சி வேண்டுமா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, ஹரியானாவில் தற்போது ஆளும் பாஜக ஆட்சியில் வன்முறையற்ற, ஊழலற்ற ஆட்சி மக்களுக்கு வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.