தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட தெரு நாய்! - stray dogs

சண்டிகர்: சாக்கடை கால்வாயில் சிக்கிய பெண் குழந்தையை தெரு நாய் மீட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட தெரு நாய்!

By

Published : Jul 20, 2019, 9:58 PM IST

Updated : Jul 20, 2019, 11:40 PM IST

ஹரியானா மாநிலம் கைத்தால் மாவட்டத்தில் சாலையோர கழிவுநீர் கால்வாய் ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்று சிக்கி தவித்தது. இதனையடுத்து தெரு நாய் அந்த பச்சிளம் குழந்தையை கழிவுநீர் கால்வாயிலிருந்து வெளியே இழுத்து வந்தது.

இதனை சிசிடிவியில் கண்ட காவல் துறையினர் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், குழந்தையை கால்வாயில் தூக்கி வீசிய பெண் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வருவதாக கூறியுள்ளனர்.

குழந்தையின் நிலைமை குறித்து மருத்துவர் தினேஷ் கூறுகையில், "குழந்தையை காலை 6 மணி அளவில் மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டுவந்தனர். அப்போது அதன் எடை 1.15 கிலோவாக இருந்தது. தலைப்பகுதியில் சிறிது காயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Last Updated : Jul 20, 2019, 11:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details