ஹரியானா மாநிலத்தில் கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசுத் துறைகளில் பணியாற்றிவரும் ஊழியர்களின் அகவிலைப்படியுடன் சேர்த்து, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய அகவிலைப்படியும் நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இருந்தே வழங்கப்படாமல் இருந்த வந்த நிலையில், இந்தத் தொகை 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அளிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.