இது குறித்து ஹரியானா மாநிலம் கர்னல் காவல்துறையினர் தெரிவிக்கையில், "கர்னல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்கள் காவல்நிலையத்தில் நேற்று(நவ.24) புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், "எனக்கும் எனது கணவர் சுஷில் குமாருக்கும் வாக்கும்வாதம் ஏற்பட்டது.
அதையடுத்து, எங்களது மூன்று, ஐந்து மற்றும் ஏழு வயதுடைய மூன்று குழந்தைகளையும் வெளியில் அழைந்துச் செல்வதாக கூறினார். ஆனால், திரும்பி வந்த போது குழந்தைகளை அழைத்து வரவில்லை.