ஹரியானா மாநிலத்தில் 90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் நாள் நடைபெறவுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் ஒரு கோடிய 81 லட்சத்து 91ஆயிரத்து 228 பேர் பொது வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 7ஆயிரத்து 486 பேர் சேவை வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019ஆம் ஆண்டில் வாக்குச்சாவடியின் எண்ணிக்கை 19.58 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய லோக் தளம், ஜேஜேபி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர்.